Showing posts with label அதிரை. Show all posts
Showing posts with label அதிரை. Show all posts

Wednesday, April 6, 2011

அதிரை அல்-அமின் பள்ளிவாசல்

  • நேற்று அஸர் தொழுகைக்கு பிறகு அதிரை அல்-அமின் பள்ளிவாசலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நமதூர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். PFI   மற்றும் தமுமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆலிம்கள் மற்றும் அல்-அமின் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  
  • ஆரம்பம் அல்ஹம்து சூராவுடன் அல்லாஹ்வின் பேரருளால் தொடங்கியது. அமிராக அன்சாரி (குலாப்ஜான்) தேர்தெடுக்கப்பட்டார்.   
  • இதில் நில வழக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இப்போது தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பட்டுகோட்டை தொகுதியில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் அல்-அமின் பள்ளி பிரச்னை தீர்த்து வைப்போம் எங்களுக்கு ஆதரவளியுங்கள்  என்று நச்சரித்து வருகின்றனர் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது அப்போது சில சகோதரர்கள் வாக்குறிதிகளை எழுத்துபூர்வமாக எழுதி வாங்கவேண்டும் என ஆலோசனையை முன்வைத்தனர்.
தீர்மானங்கள்:
  1. அல்-அமின் பள்ளி பிரச்சனையை அரசியல் ஆக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
  2. தொடர்ந்து அல்-அமின் பள்ளிக்கு இடையுறு செய்யும் திமுக கூட்டணிக்கு இத்தேர்தலில் வாக்களிக்க கூடாது.நீங்கள் விரும்பியவர்களுக்கு திமுகவை தவிர வாக்களிக்கலாம்.
  3. எந்த முறையில் அல்-அமின் பள்ளி தொடர்பாக வாக்குறிதி கொடுத்தாலும் நம்ப வேண்டாம் என மனப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
  4. பேரூராட்சியில் திமுக சார்பில் உள்ள உறுப்பினர்களே உள்ள நிலையில் நமதூரிலுள்ள சமூக அக்கறையுள்ள இளைஞர்களை பேரூராட்சி தேர்தலுக்கு சுயேட்சையாக போட்டியிட வைக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.          
  5. வாக்கு அளிக்க விருப்பம் இல்லாதவர்கள் 49-O என்ற விண்ணப்பதை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்த பட்டது.

Tuesday, August 31, 2010

"ஷிஃபா" மருத்துவமனைக்கு மறுமலர்ச்சி

"நான் நோயுற்றால், அதைக் குணப்படுத்துபவன் அல்லாஹ்தான்" (26:80) என்பது, இஸ்லாத்தின் அருள்மறையாம் குர்ஆன், மனிதனை இறை வல்லமை மீது நம்பிக்கை கொள்ளச் செய்து அறிவுறுத்தும் அருள் வாக்காகும்.

ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. சரியான மருந்தால் சிகிச்சை செய்யும் போது, அல்லாஹ் நாடினால், அந்த நோய் குணமாகும்" (சஹீஹ் முஸ்லிம்) என்பது நபிமொழியாகும்.  இதுவும் இஸ்லாத்தின் இனிய போதனைதான்.

கி.பி.1983 இல் பொதுநல நோக்குடன் தொடங்கப்பெற்றது நமதூரின் 'ஷிஃபா' மருத்துவமனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அரசு மருத்துவமனையில் இல்லாத வசதிகளுடன் உருவாயிற்று இந்த 'ஷிஃபா' மருத்துவமனை என்பதும் நாமறிந்ததே.சிறந்த மகப்பேறு பெண் மருத்துவர்கள் இங்கு முழு நேரச் சேவையில் ஈடுபட்டிருந்ததால், சுகப் பிரசவங்கள் பல நிகழ்ந்துள்ளன.  (இக்கட்டுரையாளரின் மூன்று பிள்ளைகள் இம்மருத்துவ மனையில்தான் பிறந்துள்ளனர்.)  

பல அவசர சிகிச்சைகளும் பெற்றுச் சுகமடைந்தவர்களும் நம்மூரில் ஏராளம்.  சிறப்பு மருத்துவர்கள் பலர் இங்கு வருகை தந்து சிகிச்சைகளும் தந்துள்ளனர்.  இவ்வாறு,அரசு சாராத பொது மருத்துவமனையாகவும்,சேவை மனப்பான்மையிலும் இயங்கிவந்த 'ஷிஃபா'வுக்குச் சில ஆண்டுகளாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மையை உணரத்தான் வேண்டும். 

அதற்கான காரணங்கள் யாவை என்று ஆராய்வது,இக்கட்டுரையின் நோக்கமன்று.  'நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடக்க வேண்டியது நல்லதாக இருக்கட்டும்' என்ற எண்ணத்தில், நமதூரின் நலனில் அக்கறை கொண்ட சிலர் இம்மருத்துவமனைக்குப் புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர் என்பது ஓர் ஆறுதலான செய்தியாகும்.எமது நட்பிற்குரிய அந்த நல்லுள்ளங்களின் வேண்டுகோளின்படி, நாம் ஒரு First Hand Report எடுப்பதற்காக 'ஷிஃபா'வுக்குச் சென்றோம்.

எமக்கு 'ஷிஃபா'வின் எல்லாப் பகுதிகளும் சுற்றிக் காட்டப்பட்டன.  'மாஷா அல்லாஹ்!'  இதே Infrastructure வேறு ஊர்களில் இருந்தால், இன்றைக்கு இதன் நிலையே வேறாக இருந்திருக்கும்.  எல்லா வசதிகளும் இருந்தும், அதிரையின் மருத்துவச் சேவையில் இந்த 'ஷிஃபா'வுக்கு உரிய இடமில்லாமல் போனதற்கு என்ன காரணம்?  யார் யார் காரணம்?  கேள்விகளால் கவலைதான் கூடிற்று!  இது ஒரு Full-fledged Hospital என்ற தகுதியில்,இதன் மறுமலர்ச்சிக்கான தேவைகள் யாவை என்று ஆராய முயன்றோம். 

அப்போதுதான், இந்த மருத்துவமனைக்காக அண்மையில் பணியமர்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் டாக்டர் கோமதி MBBS, DGO அவர்கள் 'ஷிஃபா'வுக்குள் இன்முகத்துடன் நுழைந்தார்கள்.  அந்நேரத்தில் அவர்களுக்கு நோயாளி ஒருவரும் இல்லாததால், நமக்கு அவர்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிட்டியது.

டாக்டர் கோமதி அவர்கள் நமதூருக்குப் புதியவர் அல்லர்.  'ஷிஃபா'வில்  சில ஆண்டுகள் பணியாற்றியதன் பின்னர், சஊதி அரேபியா, யமன் போன்ற அரபு நாடுகளில் சில ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்துவிட்டுத் திரும்பி வந்துள்ளார்கள்.  'ஷிஃபா'வின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களின் அன்பழைப்பை ஏற்று, இந்த மகப்பேறு மருத்துவர் நமதூருக்கு வந்துள்ளார்கள்.  

டாக்டர் கோமதி அவர்களைத் தற்போதைய 'ஷிஃபா'வின் இயக்குநர்கள் மிகுந்த பொருள் செலவில் வரவழைத்து, இங்குப் பணியில் அமர்த்தியுள்ளார்கள்.  டாக்டர் அவர்களின் பேச்சிலிருந்து, இந்த மருத்துவமனையை முன்னேற்றம் செய்யவேண்டும் என்ற அவரின் நோக்கம் தெரிந்தது.  தலைமை மருத்துவர் என்ற முறையில், டாக்டர் அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தார்கள்.  அவை முறையாக இதன் இயக்குநர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டன.  டாக்டரின் அயல்நாட்டு அனுபவங்களின் தாக்கம், அவர்களின் பரிந்துரைகளில் வெளிப்பட்டது. 

மொத்தத்தில், 'ஷிஃபா'வுக்கு ஒரு Face-lifting அவசரத் தேவை.  இதனை நாம் மின்னஞ்சல் மூலம் இதன் நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துவிட்டோம்.  அவர்களும், இவை இன்றியமையாதவை என்றே உணர்கின்றனர். அதன் அறிகுறி, இப்போதே தென்படுகின்றது.  அதாவது, எம் பரிந்துரைகளுள் சில இப்போதே செயலுருப் பெறத் தொடங்கியுள்ளன.  மருத்துவ உபகரணங்கள் பழுது பார்க்கப்பட்டுப் பயன்பாட்டு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த MBBS பெண் மருத்துவர் (GP) ஒருவரும் அண்மையில் பணியமர்வு பெற்றுள்ளார்.  உள்ளூர் டாக்டர்களுள், டாக்டர் ஹகீம் MBBS, DA அவர்கள் தொடக்க காலம் முதல் 'ஷிஃபா'வுடன் ஏற்படுத்திக் கொண்ட சேவைத் தொடர்பு பாராட்டத் தக்கதாகும்.

மகப்பேறு சிறப்பு மருத்துவருடன் சில பரிந்துரைகளில் நாமும் ஒத்த கருத்தில் உடன்பட்டோம்.  அவற்றுள் ஒன்று,நன்கு பயிற்சி பெற்ற 'நர்ஸ்'கள் மிகத் தேவை என்பதாகும்.சரியான பணியுடை (Uniform) அணிந்து, முறையாக அவர்கள் சேவை செய்யும்போது,நோயாளிகளுக்கு ஓர் ஆறுதல் உண்டாகின்றது.

குழந்தை நல மருத்துவர் ஒருவரின் தேவை பற்றியும் 'ஷிஃபா'வின் இயக்குநர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  அதற்கு, உடனடியாக, உள்ளூரில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரை on call basis பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடு நடைபெறுகின்றது.  தற்போது வருகை தரும் பல் மற்றும் 'ஹோமியோபதி' மருத்துவர்களின் சேவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கின்றது.

மருத்துமனையின் உள்ளும்புறமும் பல சீர்திருத்தங்களால் மிளிரப் போகின்றன, மிக விரைவில்.  நாம் வழங்கிய பரிந்துரைகளுள், கீழ்க்கண்டவை Long term projects என்ற அடிப்படையில்,'ஷிஃபா'வின் இயக்குநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன:

*'ஷிஃபா'வின் சுற்றுச் சுவருக்குள், இங்கே பணி புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான வீட்டு வசதி செய்து கொடுத்தல்.
 * புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கட்டட வசதி செய்தல்.

 * 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்யப் போதுமான வருமானம் தரும் துறைகளைத் தொடங்குதல்.

 * ஏழைகள் மற்றும் வசதியற்றவர்களின் சிகிச்சைகளுக்காகப் பொறுப்பேற்கும் நல்லுள்ளம் கொண்டவர்களை நியமித்தல்.

* வருகையாளர்களின் வசதிக்காகப் பள்ளிவாசல் கட்டுவது.

 தற்போதைய நிர்வாகிகளாகப் பட்டதாரிகள் இருவர் பணி புரிகின்றனர் என்ற செய்தி, கடந்த கால illiterate நிர்வாகிகளால் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியாகும்.

இந்த மருத்துவமனை தொடங்க இருந்த கால கட்டத்தில்,நமதூரின் தலைவர்களுள் ஒருவர் தொலைநோக்கோடு ஒரு பரிந்துரை செய்தாராம்.  அதாவது, இந்த 'ஷிஃபா' மருத்துவமனையைத் தஞ்சாவூரில் கட்டினால் நல்லதல்லவா?  நம்மூர் மக்கள் வந்து தங்கித் தமக்குப் பிடித்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெறுவார்களே.அதனால் பல டாக்டர்களின் தொடர்பு ஏற்படுமே என்பதெல்லாம் அப்பெரியவரின் ஆலோசனையாம்.  

ஆனால், நம்மூர் மக்கள் வெளியூர்களுக்குப் போய் சிரமங்களை ஏற்கக் கூடாது; செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்றெல்லாம் கருத்துக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு, மர்ஹூம் AMS முதலியவர்களால் இந்த மருத்துவமனை தொடங்கப் பெற்றதாம்.

அத்தகையோரின் நல்ல நோக்கங்கள் நிறைவேற நாமெல்லாம் பங்களிப்புச் செய்ய வேண்டாமா?  எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்றும், 'ஷிஃபா'வின் செலவினங்களை ஈடு செய்வதற்கு, இதன் வருமானத்தைப் பெருக்க என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம் என்றும் கருத்திடுங்களேன், பார்ப்போம்!

ஆக்கம்: அதிரை அஹ்மது

Saturday, August 14, 2010

ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி Vs A Chinese system of exercises


"A sound mind in a sound body is a short but full description of a happy state in the world."                                                                           - John Locke (1632-1704)

"Bodily exercise, when compulsory, does no harm to the body.  But knowledge which is acquired under compulsion obtains no hold on the mind."
                                    - Plato (427 BC-347 BC) in 'The Republic' 

மனித வாழ்க்கையில், மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம் என்பதை இன, மொழி, மத வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்வர்.  இப்பருவத்தில் நாம் பெறும் ஒழுக்கம் அல்லது ஒழுக்கமற்ற பயிற்சிதான் நம் வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும்.  இதில், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

மேற்காணும் முதல் பழமொழியில் ஜான் லோக்கி கூறுவதுபோல், உறுதியான உடலில் இருக்கும் உறுதியான மன நிலையே இவ்வுலக வாழ்வின் இனிமை நிலைக்குக் கட்டியம் கூறுவதாகும்.  இதையும் விஞ்சி, இரண்டாவது முதுமொழியில், 'The Republic' எனும் புகழ் பெற்ற இலக்கியப் படைப்பின் ஆசான் ப்லேட்டோ குறிப்பாகக் கூறுவது, இளமையில் செய்யவேண்டிய உடற்பயிற்சியின் இன்றியமையாமை பற்றியதாகும்.  இவர் அழகாகச் சொல்கிறார்:  "கட்டாயமாகக் கொடுக்கப்பட்ட உடற்பயிற்சியானது, உடலுக்கு எந்தத் தீங்கும் செய்துவிடாது.  ஆனால், கட்டாயத்தால் பெற்ற கல்வியறிவானது, மனத்துள் நிலைத்திருக்காது."

இன்று பெரும்பாலான கல்விக்கூடங்களில் பயிலும் மாணவ மாணவியர்க்குப் பாட நூல்களென்றும், வழிகாட்டி நூல்களென்றும், வீட்டுப் பாடங்களென்றும், 'ட்யூஷன்' பாடமென்றும், இன்னும் இவை போன்ற சுமைகள் பலவற்றைச் சுமத்தி, அவர்களைக் கல்வியாளர்களும் கல்விக் கூடங்களை நிர்வகிப்பவர்களும் வெறும் 'சுமை தூக்கிகளாக' ஆக்கிவிடுகின்றார்கள் என்று கூறினால் மிகைக் கூற்றாகாது.  இந்நிலையில் சிறிதேனும் மாற்றத்தைச் செய்து, அவர்களுக்குத் தரமான உடற்பயிற்சிகளை வழங்கினால், அறிஞர் ப்லேட்டோ கூறுவது போன்று, உடலுக்குத் தீங்கு விளைக்காத சில உடற்பயிற்சிகளைக் கொடுத்து, ஜான் லோக்கி கூறுவது போன்று, 'A sound mind in a sound body' உடன் எதிர்காலத்தின் இளைய சமுதாயத்தினரைப் பரிணமிக்கச் செய்யலாம்.


இவ்வகையில், நமதூரில் இயங்கும் கல்விக்கூடங்கள் எதிலும் இல்லாத 'குங்ஃபூ' என்ற ஒரு சிறப்பு உடற்பயிற்சியை இளஞ்சிறார்களுக்குக் கொடுக்க நமதூரின் ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி தொடங்கியுள்ளது.  இப்பயிற்சியைச் சோதனை அடிப்படையில், முதலில் 4, 5 வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், தஞ்சையைச் சேர்ந்த சகோதரர் முபாரக் மாஸ்ட்டர்.


52 வயதாகும் இவருக்கு, இக்கலையில் 35 ஆண்டுகளின் பட்டறிவு உண்டு.  இவர், 'The Best Martial Arts Trainer in Tanjore District' என்ற பாராட்டிற்குச் சொந்தக்காரர்.  இதுவரை நான்கு Black beltகளைப் பெற்றுள்ளார்.  இவரின் ஆண் மக்கள் மூன்று பேரும் தேசிய அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு 'பிலேக் பெல்ட்டு'களைப் பெற்றவர்களாவர்.  தஞ்சை மாவட்டத்தில் மட்டும் முபாரக் மாஸ்ட்டருக்கு 1500 மாணவர்கள் உள்ளனர்.  சிறார்களுக்கு இந்த 'Martial Arts' கற்றுக் கொடுத்து, ஆண்டு முடிவில் இவரே அவர்களுக்குச் சான்றிதழும் பட்டை (பெல்ட்டு)களும் வழங்குவார்.


ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி இப்பயிற்சியை அறிமுகப்படுத்தியதன் முழுமுதல் நோக்கம், மாணவர் மற்றும் பெற்றோர்களிடம் உள்ள தேவையற்ற அச்சவுணர்வைப் போக்கி, அவர்களைத் துணிவுள்ளவர்களாக, அறிவாற்றல் பெற்றவர்களாக, தம் பொறுப்புகளை உணர்பவர்களாக ஆக்குவதேயாகும்.  வருங்காலத்தில் கிடைக்கும் பெற்றோர்களின் வரவேற்பைப் பொறுத்து, இப்பயிற்சியை மேலும் விரிவாக்கிச் சிறுமியர்க்கும் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது இப்பள்ளி நிர்வாகம்.  சிறுமியர்க்குச் சில வரைமுறைகளுடன் கொடுக்கப்படும் 'Tai chi' என்ற ஒரு வகைப் பயிற்சியாகும் அது.  ( A Chinese system of exercises consisting sets of very slow and controlled movements. )

மாணவர்களின் பயிற்சி ஆர்வத்தையும், ஆசானின் பயிற்சியையும் கீழ்க்காணும் இணைப்பில் காணுங்கள்!   



தகவல்+புகைப்படம்: அபூபிலால்
 

Sunday, July 25, 2010

காலணி கலவரம் வழக்கில் அப்பாவிகளை விடுவிக்க வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்)

 
கீழ்கண்ட தகவலை அதிரை சம்மந்தப்பட்ட இனைய தளங்களில்  பொது நலம் கருதி வெளியிடவும்" 

 
முன்பு அந்த நாற்பது பேரில் நீங்களும் ஒருவரா? என்ற கட்டுரை "அதிரை எக்ஸ்பிரசில் வந்ததை சகோதர் மு.அ.ஹாலிது மூலம் அறிந்தேன்., இந்த வழக்கில் என்னைத்தான் முதல் குற்றவளியாக பொய்வழக்கில் சேர்த்தனர்., அதில் குற்றவளியாக புனையப்பட்ட அனைத்து அப்பாவி சகோதர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்க பலசிரமங்களுக்கு இடையில் பாடுபட்டேன் இதற்க்கு இறுதியாக  செக்கடிமேட்டிலுள்ள தியாகி அப்பாஸ் ஹாஜியார் படிப்பகத்தை சேர்ந்த நண்பர்கள் குழுதான் முழு உதவி செய்தனர்., அல்ஹம்டுளில்லாஹ்.
 
அந்த உதவியின் மூலம் என்னுடன் வழக்கிற்கு ஒத்துழைத்த பதிமூன்று நபர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டனர். மீதமுள்ளவர்களுக்கும்  தகவல் கொடுத்தும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. பரவாயில்லை. இன்ஷா அல்லாஹ் இனி அவர்களுக்கு வாய்ப்புகள் அருகில் உள்ளது.  

 
இனி அவர்கள் மேற்குறிப்பிட்ட வழக்கிலிருந்து விடுதலை பெற விரும்பினால்., இன்ஷா அல்லாஹ் நான் முழுபொறுப்பையும் ஏற்று வழக்கை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருக்கின்றேன்.  
 
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் என்னுடைய வழக்கறிஞர் திரு நடராஜன் அவர்களே உடனடியாக 9443295916  என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு வழக்கிற்கு ஒத்துளைத்தால் போதும் அவரிடம் இதைப் பற்றி (வழக்கறிஞர் அவர்களுக்கு) தகவல் விரிவாக கொடுக்கப்பட்டு விட்டது.  

 
தங்களின் அன்புள்ள 
சி. நா. அ. சரபுதீன் சிட்னி  
--www.alaippoo.blogspot.com

Sunday, July 4, 2010

அதிரையில் பொதுக் கூட்டம்

இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று 2-7-2010 அன்று அதிரை தக்வா பள்ளி அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பாக்கர், செங்கிஸ்கான் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

Saturday, June 12, 2010

அதிராம்பட்டிணத்தில் கல்வி கருத்தரங்கம்

TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரம்
(இன்ஷா அல்லாஹ்)


*10 ஆம் , 12-ஆம் வகுப்புக்கு பின் என்ன படிப்பு படிக்கலாம்?
*குறைந்த செலவில் உயர் கல்வி பெறுவது எப்படி?
*முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி திட்டங்களின் முழு விபரமும், அதை பெறும் வழிகளும்
*வேலை வாய்ப்பு பெறுவதற்க்கான தகுதிகள் என்ன?
*மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க  செய்ய வேண்டியது என்ன?

*பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க  பெற்றோர்கள்  செய்ய வேண்டியது என்ன?
*மேலும் கல்வி கல்வி உதவி, வேலை வாய்ப்பு சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கபடும்.

நாள் : 13/06/10 - ஞாயிற்று கிழமை
நேரம் : மாலை 4 மணி

சிறப்புரை : S.சித்தீக்.M.Tech-
மாநில மாணவர் அணி செயலாளர்

இடம் :  TNTJ மர்க்கஸ், அதிராம்பட்டிணம், தஞ்சை மாவட்டம்
தொடர்பிற்க்கு : 9629115317
 மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும்  கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ தஞ்சை மாவட்ட அதிராம்பட்டிணம் கிளை.
தகவல் : சகோ.சர்புதீன்

Sunday, May 30, 2010

அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுக்கு முனைவர்.அப்துல்லாஹ் பதில்கள்


அதிரை பைத்துல்மால் சார்பில் நடைபெற்று வரும் 12 ஆவது திருக்குர்ஆன் மாநாட்டில் நாடறிந்த பேச்சாளரும் உளவியல் வல்லுனருமான முனைவர். அப்துல்லாஹ் (முன்னாள் பெரியார்தாசன்) அவர்கள் மூன்றாம் நாள் அமர்வின் சிறப்பு விருந்தினராக உரையாற்ற உள்ளார்கள்.

அதிரை எக்ஸ்ப்ரஸில் மாநாட்டு நிகழ்ச்சிகளை அதிரைமீடியா.காம் உதவியுடன் நேரடி ஒளிபரப்புச் செய்து வருகிறோம். மேலும் உலகமுழுவதிலும் பரவியுள்ள அதிரைவாசிகள் பேரா.அப்துல்லாஹ் அவர்களிடம் கல்வி, உளவியல், குடும்பவியல் மற்றும் பயனுள்ள பொதுவான கேள்விகளைக் கேட்கவும், அதற்கு முனைவர் அப்துல்லாஹ் அவர்களின் பதிலைப் பெற்றுத்தரவும் மாநாட்டுக் குழுவினருடன் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

குறுகிய கால அவகாசமே இருப்பதால் இத்தகவலை தமிழ் முஸ்லிம்கள் குழுமங்களிலும் அதிரைவாசிகளின் வலைப்பூக்களிலும் பரவச் செய்து நமதூர் வாசிகள் மிகச்சிறந்த உளவியல் வல்லுனரும் தர்க்கவாதியுமான முனைவர் அப்துல்லாஹ் அவர்களிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பைப் பெறுமாறு அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

கேள்விகளை தங்கள் முகவரியுடன் adiraixpress@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது பின்னூட்டமாகவோ கேட்கலாம். இந்த அரிய வாய்ப்பை நமதூர்வாசிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

thanks adirai xpress

பைத்தூல் மால் திருக்குர் ஆன் மாநாடு நேரடி ஒளிபரப்பு

நமதூர் அதிரை பைத்துல்மால் நடத்தும் 12 ஆவது திருக்குர்ஆன் மாநாடு நேரடி ஒளிபரப்பு

இங்கு கானலாம்

http://www.adiraimedia.com

Thursday, May 27, 2010

அன்பார்ந்த சகோதரர்களே .............

அதிரை பைத்துல்மால் வருடந்தோறும் நடத்தும் திருக்குர்ஆன் மாநாட்டில் மூன்றாம் நாள் இன்ஷா அல்லாஹ்
சிறப்பு விருந்தினர்
 

முனைவர் ஜனாப் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) 


"இறைவனின் அருட்கொடை இனிய இஸ்லாம்"


என்ற தலைப்பில்  பேசுகிறார்கள்.
இடம் முகைதீன் அப்பா பள்ளி வளாகம்,செக்கடி மேடு,அதிராம்பட்டினம்.
நாள் 30-05-2010 (ஞாயிற்றுக் கிழமை)

Wednesday, May 26, 2010

வாழ்த்துகிறோம் ! கா.மு.பள்ளி.(பெண்கள் ) SSLC RESULT


முதலிடம்
R. இந்துமதி = 482 மதிப்பெண்கள்

இரண்டாமிடம்
A.சுமையா = 473 மதிப்பெண்கள்

மூன்றாமிடம்
M.ஆஃரின் பானு = 466 மதிப்பெண்கள்