Showing posts with label பயன். Show all posts
Showing posts with label பயன். Show all posts

Thursday, June 24, 2010

அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَكُونُواْ مَعَ الصَّادِقِينَ {119}
9:119. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!

உண்மை உரைப்பது இறைநம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உண்மைப் பேசுபவர் ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவார்,
உண்மைப் பேசுபவர் உலகில் நல்ல மனிதர் என்று பிறரால் போற்றப்படுவார், போற்றுதலுக்குரிய அவர் கூறும் உபதேசங்களை ஏற்று தங்களையும் சீர் திருத்திக் கொள்ள பலர் முன் வருவர். தான் உண்மைப் பேசி, பிறரையும் சீர் திருத்த முயற்சித்ததற்காக மறுஉலகில் இறைவனின் மகத்தான கூலிகளைப் பெற்று நிரந்தரமான சுவனச் சோலைகளில் வாழ்வார்.
பொய் பேசுபவர் ஈருலகிலுடம் இழிவை தேடிக் கொள்வார்.
பொய்ப் பேசுபவர் உலகில் பிற மனிதர்களால் பொய்யர் என்று இகழப்படுவதுடன் இவர் எத்தனை தத்துவங்களை முத்துக்களாக உதிர்த்தாலும் அனைத்ததையும் மக்கள் குப்பைத் தொட்டிக்கே அனுப்புவார்கள். பொய் பேசுபவர் தான் வாழ்வதே கடினம் என்பதால் அவர் பொய் பேசுவதை விடாதவரை பிறரை சீர் திருத்துவது என்கின்ற பேச்சுக்கே இடமில்லை அதனால் மறுஉலகில் இறைவனின் கடும் கோபத்திற்கு ஆளாகி நரகத்தில் தள்ளப்படுவார். பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை- என்பது தமிழ் பழமொழி
பல்கிப் பெருகும் நன்மைகள்
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அபூசுஃப்யான் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு எதிராக செயல்பட்டவர், அபூஜஹ்லும், அபூஜஹ்லைப் போன்ற பெருந் தலைவர்களும் அதிகமானோர் பத்ரில் கொல்லப்பட்டப் பின்னரும் சிறிதும் தயங்காமல் தலைமைப் பொறுப்பை ஏற்று முன்னைக் காட்டிலும் துரிதமாக செயல்பட்டவர். முஸ்லீம்களுக்கெதிரான பலப் போர்களை தலைமைத் தாங்கி திறமையாக வழிநடத்தியவர். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய முகத்தில் பயங்கர காயத்தை ஏற்படுத்தி கடைவாய் பல் உடைந்து இரத்தத்தை ஓட்டச்செய்த உஹது யுத்தத்தில் எண்ணிலடங்கா முஸ்லீம்களின் மையித்துகளின் மீது நடந்து சென்று லாத் வாழ்க ! உஸ்ஸா வாழ்க ! மனாத் வாழ்க ! என்று கைகளை உயர்த்தி விண்ணதிர முழங்கிய பயங்கர இஸ்லாமிய எதிர்ப்பாளர். 
அப்படிப்பட்ட பயங்கர இஸ்லாமிய எதிர்ப்பாளர் ஒரு நாள் இஸ்லாத்தை தழுவியதாக பிரகடனம் செய்தார்.
முஸ்லீம்களுடன் நடந்த எந்த யுத்தத்திலும் அவர் தோல்வியைத் தழுவி இஸ்லாத்தை ஏற்க வில்லை !
மாறாக
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் உண்மைப் பேசும் நற்குணம் அவருடைய  வாழ்க்கையை ஒரு நாள் தலைகீழாகப் புரட்டி எடுத்து ரலியல்லாஹீ அன்ஹீ என்ற அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரியவரானார்.
அன்றொரு நாள் !!
ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய ஃபலஸ்தீனத்து சந்தை ஒன்றில் வியாபாரம் நிமித்தம்  அபூசுஃப்யான் அவர்கள் அமர்ந்திருந்தப் பொழுது அரசவைக் காவலர்களில் சிலர் அவரை எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள் ? என்று விசாரித்து விட்டு ரோமாபுரி மன்னர் ஹிர்கல் அவர்களின் அவைக்கு அழைத்து செல்லப்பட்டார். 
அதற்குப் பின்னர் நடந்தவைகளை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் பதிகின்றார்கள்.

அபூஸுஃப்யான் உட்பட பல குறைஷிகள் வியாபார நிமித்தமாக சிரியா நாட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது ஜெருசலம் அரண்மனைக்கு வந்திருந்த ரோமப் பேரரசர் கைஸர் என்ற ஹிர்கல் அந்த அரபு வியாபார கூட்டத்தை தன்னிடம் அழைத்துவரும்படி உத்திரவிட்டார். அங்கு மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமித்துக்கொண்டு குறைஷிகளே உங்கள் பகுதியில் இறைத்தூதர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த மனிதரின் நெருங்கிய உறவினர் யாரேனும் உண்டா ? என்று கேட்கிறார். அதற்கு அபூஸுஃப்யான் நானே அவருக்கு நெருங்கிய உறவினர் என்கிறார். (அபூஸுஃப்யான் அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையின் மகனாவார்). அபூஸுஃப்யான் அவர்களையும் அவருடன் வந்திருப்பவர்களையும் தனக்கு முன்னால் நிறுத்துமாறு கட்டளையிட்ட மன்னர் தனது மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி 'நான் அந்த மனிதரைப்பற்றி (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவரிடம் (அபூஸுஃப்யான்) கேட்பேன். இவர் என்னிடம் பொய்யாக ஏதேனும் சொன்னால் மற்றவர்கள் உண்மை கூறிடவேண்டும். இதை அவர்டம் சொல்' என்றார்.
மன்னரின் கேள்வி: உங்களில் அவர்களுடைய பாரம்பரியம் எத்தகையது?
அபூஸுஃப்யான் அவர்களின் பதில்: அவர் எங்களில் சிறந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.
கேள்வி: இவருக்கு முன்னால் உங்களில் யாரேனும் எப்போதாவது (நான் இறைத்தூதர் என்ற) இந்த வாதத்தை செய்ததுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: இவரைப்பின்பற்றி செல்பவர்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லது சாமானியர்களாக இருக்கிறார்களா?
பதில்: சாமானியர்கள்தான் அவரை பின்பற்றிச் செல்கின்றார்கள்.
கேள்வி: அவரை பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா?இ அல்லது குறைகின்றனரா?
பதில்: அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்.
கேள்வி: அவர் காட்டுகின்ற மார்க்கத்தில் நுழைந்த பின்னர் அதன் மீது அதிருப்தி கொண்டு யாரேனும் அந்த மார்க்கத்திலிருந்து விலகியதுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: அவர் இப்போது வாதிக்கின்ற (நபித்துவ) வாதத்தை சொல்வதற்கு முன்பு அவர் பொய் சொல்வதாக எப்போதாவது அவரை சந்தேகித்ததுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: அவர் (எப்போதாவது) வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்திருக்கிறாரா?
பதில்: இதுவரை இல்லை. நாங்கள் இப்போது அவருடன் (ஹுதைபியா என்னும் இடத்தில்) ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது. ( இந்த பதிலைக் குறிப்பிடுகின்ற அபூஸுஃப்யான் அவர்கள் அப்போதைக்கு முஹம்மது நபி மீது குறை கற்பிக்க அந்த வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் எனக்கு கிடைக்கவில்லை என்று கூறினார் ).
கேள்வி: அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கின்றீர்களா?
பதில்: ஆம்
கேள்வி: அவருடன் நீங்கள் புரிந்த போர்களின் முடிவுகள் எவ்வாறிருந்தன?
பதில்: எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றி தோல்வி மாறி மாறி வந்திருக்கின்றன.
கேள்வி: அவர் உங்களுக்கு என்ன போதிக்கின்றார்?
பதில்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்இ அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்இ உங்கள் முன்னோர்கள் கூறிவந்த தவறான கொள்கைகளை விட்டுவிடுங்கள் என்று போதிக்கிறார். தொழுகையைக் கடைப்பிடித்தல், உண்மைப்பேசுதல், கற்பைப் பேணுதல், உறவு முறைகளைப் பேணுதல் போன்ற அறப்பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்.
பதில்களை பெற்றுக்கொண்ட ஹிர்கல் மன்னர் பின்வருமாறு கூறினார்:
நான் உம்மிடம் அவரைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு நீர் அளித்த பதில்களை கவனிக்கினற போது ஒரு உண்மை புரிகின்றது.
எந்த இறைத்தூதருமே இவரைப்போன்றே அவரவரின் சமூகத்திலுள்ள உயர்ந்த பாரம்பரியத்திலிருந்து தான் அனுப்பப்பட்டுள்ளனர்.
இவருக்கு முன்னர் (இவருடைய பாரம்பரியத்தில்) யாரேனும் இந்த வாதத்தை செய்திருந்தால் 'முன்னர் செய்யப்பட்டு வந்த வாதத்தைப் பின்பற்றித்தான் இவரும் செய்கிறார்' என்று எண்ணியிருப்பேன்.
இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் தமது முன்னோரின் மன்னராட்சியை இவர் அடைய விரும்புகின்றார் என்று எண்ணியிருப்பேன்.
இந்த (தூதுத்துவ) வாதத்தை இவர் செய்வதற்கு முன்பு பொய் சொல்லக்கூடியவர் என்று அவரை நீங்கள் சந்தேகித்ததும்கூட இல்லை என்கின்றபோது 'மக்களிடம் பொய் சொல்லத் துணியாதவர் இறைவன் மீது பொய்யுரைக்க துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.
ஆரம்பத்தில் சாமானியர்கள்தான் அவரை பின்பற்றுகின்றனர் என்பது முற்றிலும் உண்மையே. அப்படிப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்களை பின்பற்றுபவர்களாக இருந்துள்ளார்கள்.
அவரை பின்பற்றுபவர்கள் அதிகரித்துச்செல்ல காரணம் என்னவென்றால்இ இறைநம்பிக்கையைப் பொறுத்தவரை அது நிறைவுறும் வரை அப்படித்தான் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.
அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரும் அதிருப்தி கொண்டு அதிலிருந்து விலகவில்லை என்பதற்கு காரணம்இ விசுவாசத்தின் தெளிவு இதயங்களுக்குள் புகுந்து விட்டால் அது மீண்டும் வெளியேறாது. .
இறைத்தூதர்களில் யாரும் மோசடி செய்ய மாட்டார்கள் என்பதற்கேற்ப இவரும் அவ்வாறு திகழ்கிறார். எனவே நீர் அவரைப் பற்றி குறிப்பிட்ட புதில்கள் யாவும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழ் உள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார்.
நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டப்பின் என்னுடன் வந்தவர்களிடம்இ
 நான் பொய்யான தகவல்களை கூறியதாக என் வியாபாரக் குழுவினர்கள் கூறிவிடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் அப்போது எனக்கு இல்லாதிருந்தால் இறைவன் மீது ஆணையாக! முஹம்மது நபியைப் பற்றி பொய்யான தகவல்களையே கூறியிருப்பேன்  என்றுக் கூறி விட்டு 'ரோமர்களின் மன்னனிடத்திலும் முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காரியம் மோலோங்கி விட்டது'' என்று கூறினேன்.
அப்போதிருந்தே அவர்கள் தாம்  ( முஹம்மது ஸல் அவர்களின் மார்க்கம் ) வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே நான் இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்குள்ளேயும் இஸ்லாத்தை நுழைத்து விட்டான். ஆதாரம்: புகாரி, முஸ்லீம்

மேற்காணும் சம்பவத்தின் மூலமாக இன்றைய முஸ்லீம் சமுதாயத்திற்கு நிறையப் படிப்பினைகள் குவிந்து கிடக்கின்றன.
1.        ஏற்கனவே இறுதி நபியின் வருகையைப் படித்திருந்த ஹிர்கல் மன்னனுடைய கேள்விகளுக்கு அபூசுஃப்யான் அவர்கள் பொய் கலக்காமல் கூறிய உண்மையான பதில்கள் ஹிர்கல் மன்னனுக்கு மனநிறைவை ஏற்படுத்தி இறுதி நபியின் வருகையின் மீதான அவரது நம்பிக்கையை மேலும் உறுதிப் படுத்தியது. 
1.
2.       நபிகளார் உண்மை பேசக் கூடியவர் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் முன்னோர்கள் சார்ந்த மதத்தின் மீது கொண்டிருந்த கண்மூடித் தனமான வெறியின் காரணத்தினால் மூடி இருந்த அவரது அறிவுக் கண்களை பொய் கலவாத இந்த சத்திய உரையாடல் மூலமாக உள்ளத்தை தெளிவடையச் செய்து அல்லாஹ் அவரது மூடி இருந்த அறிவுக் கண்களை திறக்கச் செய்தான். இந்த சம்பவத்தின் பிறகே அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை விதைத்தான் என்று அவரேக் கூறுகின்றார்.

3.       அபூசுஃப்யான் (ரலி) அவர்களுக்குப் பின், அவரது மகன் முஆவியா (ரலி) அவர்கள், அவரது மகன் யஜீது, யஜீதுடைய மகன் முஆவியா என்று இவர்களின் ஆட்சி காலத்தில் தான் இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஸ்பெயினைக் கடந்து விரிவடைந்து சென்ற வரலாற்றைப் படிக்கின்றோம்.
சத்திய இஸ்லாத்தை எடுத்துச்செல்லும் பணி ஒவ்வொரு முஸ்லீமின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளதால் முஸ்லீம்கள் உண்மை உரைப்பவர்களாக இருந்தால் தான் அவர்களின் வாய்மையைப் பார்த்து பலர் இஸ்லாத்தை தழுவுவார்கள் இஸ்லாம் சேர வேண்டியவர்களை சரியாக சென்றடையும் என்பதை உலக மக்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட நபிகளாரின் உண்மைப் பேசும் நற்குணம் ஏற்படுத்திய தாக்கத்தை மேற்காணும் சம்பவத்தின் மூலம் அறிந்தோம்.
வெட்கம் ஈமானில் ஒருப் பகுதி
அபூசுஃப்யான் அவர்கள் மன்னரின் அவையை விட்டு வெளியேறியதும் அவருடன் வந்திருந்தவர்களுடன் கூறிய வார்த்தைகளில் கீழ்காணும் வாசகம் முக்கியமானதும் இன்றைய முஸ்லீம் சமுதாயத்திற்கு தேவையானதுமாகும்.  
Ø  மன்னர் ஹிர்கல் அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிக் கேட்ட கேள்விகளின் போது  என்னைப் பொய்யரென்று என்னுடன் வந்தவர்கள் கூறி விடுவார்களே என்றெண்ணி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி பொய் கூறுவதற்கு வெட்கப்பட்டேன் அதனால் உண்மையைக் கூறினேன் என்றுக் கூறினார்.
ஆபூசுஃப்யான் அவர்களுடன் வந்தவர்கள் அனைவரும் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் பொய் பேச மாட்டார்கள் என்பதை அறிந்திருந்தனர் அதனால் பொய் கூறினால் உடன் வந்தவர்களால் மக்கமா நகரில் அபூசுஃப்யான் ஹிர்கல் மன்னனிடத்தில் முஹம்மதைப் பற்றி பொய் பேசினார் என்று பரப்பி விட்டால் தனது இமேஜ் பாதிக்கும் மக்கள் முன் தலைநிமிர்ந்து நடக்க முடியாது என்றெண்ணி வெட்கப்பட்டார்.
இன்றுப் பார்க்கின்றோம்.
ஒருப் பொய்யை பகிரங்கமாக பலர் முன்னிலையில் கூறி விட்டு அதை மறைக்க அடுத்தடுத்தப் பொய்களை அடுக்கடுக்காகக் கூறுகின்றனர். அதற்காக அறவே வெட்கப் படுவதில்லை,
இன்னும்
பெருமைக்காக வெட்கத்தை விட்டுப் பொய் பேசுகின்றனர், 
இன்னும்
புகழுக்காக வெட்கத்தை விட்டுப் பொய் பேசுளின்றனர்,
இன்னும் ஒருப் படி கீழிறங்கி
பிறர் சிரிப்பதற்காக வெட்கத்தை விட்டுப் பொய் பேசுகின்றனர்,
அபூசுஃபயான் அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னரே பொய் பேச வெட்கப்பட்டதை நினைத்து காலம் கடந்தேனும் இப்பொழுதாவது பொய்யைத் தவிர்ந்து உண்மைப் பேசுவதற்கு தயாராகுவார்களா ?  
ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி
வெட்கத்தை விடும்பொழுது இறைநம்பிக்கையை இழக்க நேரிடுகிறது, இறைநம்பிக்கையை இழந்த நிலையில் ஒருவருக்கு மரணம் நேரிட்டால் அவரது மறுமை நிலை என்னவாக இருக்கும் என்பதை சிந்தித்துக் கொள்ளட்டும் ?
உண்மையாளர்களின் தோழமை
உண்மைப் பேச வேண்டும் என்றால் ?
உண்மையாளராக வாழ வேண்டும் என்றால் ?
தானும் வாழ்ந்து தன்னால் பிறரும் வாழ வேண்டும் என்று நினைத்தால் ?
முதலில் அவர் உண்மையாளர்களுடன் தங்களுடைய தோழமையை ஏற்படுத்திக் கொள்வது அவசியத்திலும் அவசியம். 
நமக்கென்ன நாம் சரியாக இருந்தால் போதும் நம்முடன் இருப்பவர்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை என்று நினைத்து அலச்சியப்போக்கை கையாண்டால் ? நம்மை அவர்களுடைய வழியில் சுலபமாக சூழ்நிலை மாற்றி விடும் ஷைத்தானின் வேலையும் இலகுவாகி விடும் சுற்றுச் சூழலை மாற்றாமல் சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திகப் கொள்ள நிணைப்பது கடினமானக் காரியம் என்பதால் எல்லாம் அறிந்த அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ் தன் திருமறைக் குர்ஆனில்  உண்மையாளர்ளுடன் இணைந்தது கொள்ளுங்கள் என்றுக் கூறுகிறான்.
9:119. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Saturday, June 12, 2010

டவரு தவறுதான்

நகரெங்கும் சிவப்பு, காவி, வெள்ளை, பச்சை என கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக நின்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது. இந்த டவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் கதிர் வீச்சு காரணமாக மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.

ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம்..." என்கிறார்.

ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர். செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30 டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார். இந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார்.

தமிழகத்தில் பல இடங்களில் வீடுகளின் கூரைகளை செல்போன் டவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர் பலர். பணத்தைக் கொடுத்து அப்பட்டமாக மரணத்தை வாங்கும் இவர்கள் விழித்துக் கொள்ளவே மாட்டார்களா?