Showing posts with label தீவுத்திடல். Show all posts
Showing posts with label தீவுத்திடல். Show all posts

Wednesday, June 9, 2010

15 லட்சம் இஸ்லாமியர்கள் பங்கேற்கும் பேரணி- மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. நிறுவன தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜெய்னுல் ஆபிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் இஸ்லா மியர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். இந்த மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும். இதன் மூலம் அனைத்து துறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி ஒடுக்கப்பட்டோரின் உரிமைப்பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந்தேதி நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 15 லட்சம் பேர் குடும் பத்துடன் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டின் செயல் திட்டங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு வாகன நிறுத்துமிடங்கள், தேவையான வசதிகள் செய்து கொடுப்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள் ளது. எங்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து கட்சியினரையும் அழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாநில தலைவர் பக்கீர் முகமது அல்தாபி, துணை தலைவர் ரகமத்துல்லா, பொதுச் செயலாளர் அப்துல் அமீது, பொருளாளர் சாதிக், செய லாளர் தவ்பீக், மாநாட்டு குழு தலைவர் சைபுல்லா ஹாஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.