Saturday, August 14, 2010

ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி Vs A Chinese system of exercises


"A sound mind in a sound body is a short but full description of a happy state in the world."                                                                           - John Locke (1632-1704)

"Bodily exercise, when compulsory, does no harm to the body.  But knowledge which is acquired under compulsion obtains no hold on the mind."
                                    - Plato (427 BC-347 BC) in 'The Republic' 

மனித வாழ்க்கையில், மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம் என்பதை இன, மொழி, மத வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்வர்.  இப்பருவத்தில் நாம் பெறும் ஒழுக்கம் அல்லது ஒழுக்கமற்ற பயிற்சிதான் நம் வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும்.  இதில், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

மேற்காணும் முதல் பழமொழியில் ஜான் லோக்கி கூறுவதுபோல், உறுதியான உடலில் இருக்கும் உறுதியான மன நிலையே இவ்வுலக வாழ்வின் இனிமை நிலைக்குக் கட்டியம் கூறுவதாகும்.  இதையும் விஞ்சி, இரண்டாவது முதுமொழியில், 'The Republic' எனும் புகழ் பெற்ற இலக்கியப் படைப்பின் ஆசான் ப்லேட்டோ குறிப்பாகக் கூறுவது, இளமையில் செய்யவேண்டிய உடற்பயிற்சியின் இன்றியமையாமை பற்றியதாகும்.  இவர் அழகாகச் சொல்கிறார்:  "கட்டாயமாகக் கொடுக்கப்பட்ட உடற்பயிற்சியானது, உடலுக்கு எந்தத் தீங்கும் செய்துவிடாது.  ஆனால், கட்டாயத்தால் பெற்ற கல்வியறிவானது, மனத்துள் நிலைத்திருக்காது."

இன்று பெரும்பாலான கல்விக்கூடங்களில் பயிலும் மாணவ மாணவியர்க்குப் பாட நூல்களென்றும், வழிகாட்டி நூல்களென்றும், வீட்டுப் பாடங்களென்றும், 'ட்யூஷன்' பாடமென்றும், இன்னும் இவை போன்ற சுமைகள் பலவற்றைச் சுமத்தி, அவர்களைக் கல்வியாளர்களும் கல்விக் கூடங்களை நிர்வகிப்பவர்களும் வெறும் 'சுமை தூக்கிகளாக' ஆக்கிவிடுகின்றார்கள் என்று கூறினால் மிகைக் கூற்றாகாது.  இந்நிலையில் சிறிதேனும் மாற்றத்தைச் செய்து, அவர்களுக்குத் தரமான உடற்பயிற்சிகளை வழங்கினால், அறிஞர் ப்லேட்டோ கூறுவது போன்று, உடலுக்குத் தீங்கு விளைக்காத சில உடற்பயிற்சிகளைக் கொடுத்து, ஜான் லோக்கி கூறுவது போன்று, 'A sound mind in a sound body' உடன் எதிர்காலத்தின் இளைய சமுதாயத்தினரைப் பரிணமிக்கச் செய்யலாம்.


இவ்வகையில், நமதூரில் இயங்கும் கல்விக்கூடங்கள் எதிலும் இல்லாத 'குங்ஃபூ' என்ற ஒரு சிறப்பு உடற்பயிற்சியை இளஞ்சிறார்களுக்குக் கொடுக்க நமதூரின் ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி தொடங்கியுள்ளது.  இப்பயிற்சியைச் சோதனை அடிப்படையில், முதலில் 4, 5 வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், தஞ்சையைச் சேர்ந்த சகோதரர் முபாரக் மாஸ்ட்டர்.


52 வயதாகும் இவருக்கு, இக்கலையில் 35 ஆண்டுகளின் பட்டறிவு உண்டு.  இவர், 'The Best Martial Arts Trainer in Tanjore District' என்ற பாராட்டிற்குச் சொந்தக்காரர்.  இதுவரை நான்கு Black beltகளைப் பெற்றுள்ளார்.  இவரின் ஆண் மக்கள் மூன்று பேரும் தேசிய அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு 'பிலேக் பெல்ட்டு'களைப் பெற்றவர்களாவர்.  தஞ்சை மாவட்டத்தில் மட்டும் முபாரக் மாஸ்ட்டருக்கு 1500 மாணவர்கள் உள்ளனர்.  சிறார்களுக்கு இந்த 'Martial Arts' கற்றுக் கொடுத்து, ஆண்டு முடிவில் இவரே அவர்களுக்குச் சான்றிதழும் பட்டை (பெல்ட்டு)களும் வழங்குவார்.


ஏ.எல்.மெட்ரிகுலேஷன் பள்ளி இப்பயிற்சியை அறிமுகப்படுத்தியதன் முழுமுதல் நோக்கம், மாணவர் மற்றும் பெற்றோர்களிடம் உள்ள தேவையற்ற அச்சவுணர்வைப் போக்கி, அவர்களைத் துணிவுள்ளவர்களாக, அறிவாற்றல் பெற்றவர்களாக, தம் பொறுப்புகளை உணர்பவர்களாக ஆக்குவதேயாகும்.  வருங்காலத்தில் கிடைக்கும் பெற்றோர்களின் வரவேற்பைப் பொறுத்து, இப்பயிற்சியை மேலும் விரிவாக்கிச் சிறுமியர்க்கும் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது இப்பள்ளி நிர்வாகம்.  சிறுமியர்க்குச் சில வரைமுறைகளுடன் கொடுக்கப்படும் 'Tai chi' என்ற ஒரு வகைப் பயிற்சியாகும் அது.  ( A Chinese system of exercises consisting sets of very slow and controlled movements. )

மாணவர்களின் பயிற்சி ஆர்வத்தையும், ஆசானின் பயிற்சியையும் கீழ்க்காணும் இணைப்பில் காணுங்கள்!   



தகவல்+புகைப்படம்: அபூபிலால்
 

No comments:

Post a Comment