Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Saturday, May 29, 2010

படிப்பினை தரும் விமான விபத்து

1. சமீபத்தில் தனது ஊரில் (பட்கல்) 6 மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு கோர விபத்தில் தனது மனைவியையும் மூன்று உறவினர்களையும் இழந்தார், துபையில் வேலை பார்க்கும் ஒருவர்.

இதனால் பாதிப்படைந்த தனது மூன்று சிறு குழந்தைகளையும் (வயது 7, 9, 11) துபைக்கு அழைத்திருந்தார். இங்கு வந்து இட மாறுதலாலும். மற்ற உறவினர்களைப் பார்த்ததாலும் அக் குழந்தைகலின் முகத்தில் புன்னகை மலர ஆரம்பித்திருந்தது.

கோடைகால விடுமுறையை துபையில் கழித்து விட்டு தந்தையுடன் ஊருக்குத் திரும்பும் போதுதான் இந்த விபத்து. நான்கு பேரும் இறந்துவிட்டனர். இவர்களின் குடும்பத்தில் தற்போது உயிருடன் இருப்பது 3 வயது குழந்தை மட்டுமே..

2. தனது கணவர் வருகிறார் என்று ஆசை ஆசையாக காத்திருக்கும் போது தரையில் விமானம் இறங்குகிறது ஆனாலும் கணவரை வீட்டிற்கு அழைத்துப் போக முடியவில்லை. அவரது உடலைப் பார்த்தாவது கதறி அழாலாம் என்றால் உடலை அடையாளம் கண்டு எடுத்துச் செல்ல முற்படும் போது வேறு இருவர் அது அவர்களது உறவினரின் உடல் என்று சொந்தக் கொண்டாடும் நிலை. இந்த மனைவியின் நிலை என்ன?

இது போன்று நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் பல…

சற்றே யோசிப்போம். நம்மில் எத்தனை பேர் எத்தனைத் தடவை சுகமாக பயணம் செய்து பாதுகாப்பாக சென்று வந்திருக்கிறோம். ஒருமுறையேனும் இறைவனுக்கு நன்றி செலுத்தியது உண்டா?

முப்பதாயிரம் அடி உயரத்தில், எந்தவித பிடிப்புமின்றி அந்தரத்தில் பறந்துகொண்டிருக்க நாமோ உள்ளே சினிமா பார்த்துக் கொண்டு, சிரித்துக் கொண்டு, இன்னும் சிலரோ தண்ணியடித்துக் கொண்டு……

சகோதர்களை இது போன்று விபத்துகளில் நொடியில் மரணம் நேரும். விமான பயணத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இறைச் சிந்தனையில் இருக்க வேண்டும். கேலிக் கூத்துகளை. சினிமாக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏறும்போதும் இறங்கும் போதும் துஆக்களை ஓதிக் கொள்ளுங்கள்.

விமான விபத்தில் இறந்தவர்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னிப்பானாக, அவர்களாது கப்ர்களை சுவனத்தின் பூங்காக்களாக ஆக்கி அருள்வானாக (ஆமீன்)

source: email sent  by farook