Showing posts with label 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு. Show all posts
Showing posts with label 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு. Show all posts

Tuesday, July 13, 2010

அவசர வேண்டுகோள்

அன்பான அதிரைவாசிகளே,

நேற்று முதல் இம்மாதம் 15 தேதி வரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, திருத்தம் செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் விரைந்து பதிந்து கொள்ளுங்கள். இந்த வாய்ப்பை விட்டால் 2011 ல் தான் மீண்டும் பதிய முடியும் என்று தெரிகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு சென்ற மாதம் 1 தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் எத்தனை சதவீதம், அவர்களது வாழ்வாரம் பற்றி அரசுகளும், ஏனையோரும் தெரிந்து கொள்ள இந்த கணக்கெடுப்பு முக்கியமானது. ஆகையால் இதுவரை கணக்கெடுப்பு பற்றி தெரியாதவர்கள் அவசியம் இதில் பங்கெடுத்து தங்களது குடும்ப விவரங்களை பதிந்து கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் அவசியம் உள்ளூரில் உள்ள குடும்பத்தினருக்கு நினைவூட்டுங்கள்.