மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இன்று கோவையில் தனியார் பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’காஷ்மீர் பிரச்சனை பற்றி ஜூன் மாதமே மத்திய அரசுக்கு எடுத்துச்சொன்னோம். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது.அதனால்தான் கடந்த 100 நாட்களில் 108 இளைஞர்களை இழந்து நிற்கிறோம்.
அவர் மேலும், ‘’காமன்வெல்த்- அன் காமன்வெல்த்’’ என்று கமெண்ட் அடித்தார். தொடர்ந்து, ‘’காமன்வெல்த்தை பொறுத்தவரை இந்தியாவின் மானம் பறிபோகும் என்பதால்தான் கொஞ்சம் அமைதியாக இருக்கிறோம்.
அதற்காக இதில் நடக்கும் ஊழலையும், லஞ்சத்தையும் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அயோத்தியில் 24ம் தேதி கூறப்படவேண்டிய தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது வேதனை. உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும். தீர்ப்புக்கு பின்னர் எவரும் எந்த வித தீய வழிகளில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment