Monday, September 20, 2010

ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆயுதப்படைகள் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்; அனைத்து கட்சி கூட்டத்தில் திருமாவளவன் வலியுறுத்தல்


ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்த கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நமது மக்களே என்று கூறினார். இது மிகவும் பாராட்டுக்குரியதாகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்களிடையே உள்ள உண்மை நிலவரம் என்ன என்பதைச் சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன். அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் மனநிலை என்ன என்பதை இந்திய அரசு அறிந்துள்ளதா? இல்லையா? என்று எனக்குத் தெரியவில்லை.
 
இந்திய அரசுக்கும் ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கும் இடையே உள்ள முதன்மையான முரண்பாடு இதுதான் என்று உணர்கிறேன். அம்மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது எனும் கோணத்திலிருந்து இப்பிரச்சினையை இந்திய அரசு அணுக வேண்டும். அவ்வாறு இதனை அணுகா விட்டால் இப்பிரச்சினைக்கு நிலையான தொரு தீர்வை நம்மால் காணவே முடியாது

No comments:

Post a Comment